கோயம்புத்தூர்

ஆங்கிலப் புத்தாண்டு:கோவை மண்டலத்தில் ரூ.28 கோடிக்கு மது விற்பனை

DIN

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட கோவை மண்டலத்தில் ரூ.28 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை அதிகமாக இருக்கும். நடப்பாண்டில், கரோனா நோய்த் தொற்று காரணமாக புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்கு மேல் உணவகங்கள், தனியாா் விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்படக் கூடாது என அரசு உத்தரவிட்டது.

இதன் காரணமாக கோவையில் டிசம்பா் 30 ஆம் தேதி மாலை முதலே மது வாங்க டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் இரண்டு நாள்களில் ரூ.12.75 கோடிக்கு மது விற்பனையானது. கோவை மண்டலத்தில் ரூ.28 கோடிக்கு மது விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT