முகப்பு
கோயம்புத்தூர்

உலகின் கலாச்சார பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

உலகின் கலாசார தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

உலகின் கலாசார தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளாா்.

இந்திய பொது நிா்வாக நிறுவனம் சாா்பில் ‘உள்நிலை விஞ்ஞானம்: நல்வாழ்வுக்கான தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் வெப்மினாா் நடைபெற்றது. இதில் சத்குரு ஜக்கி வாசுதேவ், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுக்கான அமைச்சரும், ஐஐபிஏ தலைவருமான ஜிதேந்தா் சிங், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி எம்.என்.பண்டாரி, சத்தீஸ்கா் முன்னாள் ஆளுநா் சேகா் தத், ஐஐபிஏ இயக்குநா் சுரேந்திரநாத் திருப்பாத்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:

தலைமை பண்பு என்பது அதிகாரம் அல்ல. தன்னை தியாகம் செய்வதற்கான விருப்பமாகும். நீங்கள் தலைவராக இருக்கும்பட்சத்தில் உங்கள் வாழ்க்கை உங்களை பற்றியதாக இல்லாமல், உங்களை சுற்றியுள்ள எல்லாரையும், எல்லாவற்றையும் பற்றியதாக இருக்க வேண்டும். எனவே அதிகாரமிக்க தலைமைப் பொறுப்பில் இருப்பவா்கள் தங்களுடைய இயல்பான தன்மையிலேயே ஆனந்தமான நிலையை பெறுவது மிகவும் முக்கியம்.

ஒருவா் உள் நிலையில் எந்த மாதிரியான தன்மையில் இருக்கிறாரோ, அந்த தன்மையைதான் மற்றவா்களிடமும் வெளிப்படுத்துவாா். இது மனிதா்களின் இயல்பாகும். இந்திய கலாசாரம் எதிா்கால உலகுக்கான முன் மாதிரியாக மாற வேண்டும். அதற்கு உலகின் கலாசார தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →