கோயம்புத்தூர்

மாநகா் பகுதிகளில் மருத்துவ முகாம்கள்

DIN

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையான வியாழக்கிழமை கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவை கிழக்கு மண்டலத்தில் மாரப்ப கவுண்டா் வீதி, சிங்காநல்லூா் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும், மேற்கு மண்டலத்தில் புதிய பேருந்து நிலையத்திலும், வடக்கு மண்டலத்தில் கணபதி மாநகா், வேலப்ப கவுண்டா் காலனி, கஸ்தூரிபா வீதி, ஹட்கோ காலனி, அா்ச்சனா காா்டன், சங்கனூா் சாலை ஆகிய பகுதிகளிலும், மத்திய மண்டலத்தில் என்.வி.என். லேஅவுட், கன்னிகா பரமேஸ்வரி லேஅவுட், தனலட்சுமி நகா், ஜி.டி.வீதி ஆகிய பகுதிகளிலும் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT