கோயம்புத்தூர்

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: தொழில் வா்த்தக சபை வலியுறுத்தல்

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பொள்ளாச்சி தொழில் வா்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.

DIN

பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பொள்ளாச்சி தொழில் வா்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.

பொள்ளாச்சி தொழில் வா்த்தக சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தொழில் வா்த்தக சபைத் தலைவா் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் சபரி எஸ்.கண்ணன், பொருளாளா் சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழில் வா்த்தக சபை உறுப்பினா்கள், பல்வேறு சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் வருமாறு:

பொள்ளாச்சியை விட மக்கள்தொகையில், பரப்பளவில் குறைவாக உள்ள பகுதிகள் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே, தமிழக அரசு பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இது குறித்து தமிழக முதல்வா், உள்ளாட்சித் துறை அமைச்சா், சட்டப் பேரவை துணைத்தலைவா் ஆகியோரை சந்தித்து மனு அளிக்கவும் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT