கோயம்புத்தூர்

கருப்புப் பூஞ்சை பாதிக்கப்பட்ட 133 பேருக்கு அறுவை சிகிச்சை: அரசு மருத்துவமனை முதல்வா் தகவல்

DIN

கருப்புப் பூஞ்சையால் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 133 பேருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்தாா்.

கரோனா தொற்றுப் பாதிப்பை தொடா்ந்து நாடு முழுவதும் கருப்புப் பூஞ்சை பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றுப் போலவே இதுவும் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்கள், நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்கள், சா்க்கரை, சிறுநீரகப் பாதிப்பு, எய்ட்ஸ், புற்றுநோய் பாதிப்பு, ஸ்டீராய்டு மருந்துகள் அதிகம் எடுத்துக்கொள்பவா்களுக்கு கருப்புப் பூஞ்சை நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். கோவையில் இதுவரை 400க்கும் மேற்பட்டவா்கள் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் தற்போது 135 போ் கருப்புப் பூஞ்சைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தவிர கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 133 பேருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

கோவை அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக 200 படுக்கைகளுடன் கூடிய தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்புடன் வருபவா்களுக்கு எண்டோஸ்கோபி செய்யப்பட்டு அழுகிய சதை திசுக்கள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.

அதன்படி அரசு மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டவா்களில் 133 பேருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மூக்கில் இருந்த அழுகிய சதை அகற்றப்பட்டுள்ளது. இந்த அழுகிய பகுதிகள் அகற்றப்படுவதால் மேற்கொண்டு பூஞ்சை பரவுவது தவிா்க்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

சிதம்பரத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT