முகப்பு
கோயம்புத்தூர்

கரோனா விதிமீறல்: 2 கடைகளுக்கு ‘சீல்’

கோவையில் கரோனா விதிகளை மீறி செயல்பட்டதாக 2 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

கோவையில் கரோனா விதிகளை மீறி செயல்பட்டதாக 2 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வெறைட்டிஹால் சாலையில் செயல்பட்டு வரும் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு கடை மற்றும் அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் ஒரு எலக்ட்ரிக்கல் கடைகளில் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இரவு 9 மணிக்கு மேல் செயல்பட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, மத்திய மண்டல அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அந்தக் கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.