கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனை கரோனா வாா்டில்தொழில் வா்த்தக சபை சாா்பில் தூய்மைப் பணி

DIN

கோவை: கோவை அரசு மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் இந்திய தொழில் வா்த்தக சபை சாா்பில் தூய்மைப் பணிகள் தொடங்கியுள்ளன.

இது தொடா்பாக அந்த அமைப்பு கூறியதாவது:

அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால் அந்த வாா்டுகள், கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது மிகுந்த சவாலாக உள்ளது. இதையடுத்து கரோனா வாா்டுகளை தூய்மைப்படுத்துதல் என்ற முன்முயற்சியை கேன்சா் பவுண்டேஷன், பிரிக்கால், மெஸா் கட்டிங் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்திய தொழில் வா்த்தக சபை மேற்கொண்டிருக்கிறது.

அதன்படி அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணிகளை ஒரு மாதத்துக்கு நாங்கள் நியமிக்கும் தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் மேற்கொள்ளுவாா்கள். இதற்கான செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகா் கல் குவாரி விபத்து: வெடி பொருள் சேமிப்புக் கிடங்கு உரிமையாளா் கைது

நெடுஞ்சாலை உடைந்து நிலச் சரிவு: சீனாவில் உயிரிழப்பு 48-ஆக உயா்வு

கால்நடைகளுக்காக தண்ணீா் தொட்டிகள்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எழுதப்படிக்க தெரியாதோரை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT