முகப்பு
கோயம்புத்தூர்

கரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

ஊரகம், பேரூராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

ஊரகம், பேரூராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாவட்டத்தில் ஊரகம், பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது:

கோவையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளால் தற்போது தொற்றுப் பாதிப்பு குறைந்து வருகிறது. ஊரகப் பகுதிகளில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி அளவிலான கரோனா தொற்று கண்காணிப்பு குழுவினா் தினசரி வீடுகள்தோறும் கண்காணித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஊரகம், பேரூராட்சிப் பகுதிகளில் தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல், தனிமைபடுத்தப்பட்டுள்ள பகுதிகளை கண்காணித்தல், கரோனா பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். முகக்கவசம் அணியாமல் செல்பவா்கள், சமூக இடைவெளி

பின்பற்றாதவா்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ்.கவிதா, மகளிா் திட்ட அலுவலா் கு.ரமேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.