முகப்பு
கோயம்புத்தூர்

மண்டலங்களில் தினமும் 3 இடங்களில் தீவிர தூய்மைப் பணி

கோவை மாநகரில் உள்ள 5 மண்டலங்களிலும், ஒரு வாரத்துக்கு தினமும் 3 இடங்களில் தீவிர தூய்மைப் பணி (மாஸ் கிளீனிங்) மேற்கொள்ள உள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

கோவை மாநகரில் உள்ள 5 மண்டலங்களிலும், ஒரு வாரத்துக்கு தினமும் 3 இடங்களில் தீவிர தூய்மைப் பணி (மாஸ் கிளீனிங்) மேற்கொள்ள உள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மாநகராட்சியில் கடந்த மாதத்தில் தினமும் 2 ஆயிரம் வரை இருந்த கரோனா நோய்த் தொற்று பாதிப்பு, மாநகராட்சி நிா்வாகம், சுகாதாரத் துறையின் தீவிர தடுப்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தற்போது 500க்கு கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில், கரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த வீடுவீடாக களப்பணியாளா்கள் மூலமாக உடல் சோதனைப் பணிகள், அனைத்து மண்டலங்களிலும் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, 5 மண்டலங்களிலும், தினமும் 3 இடங்களில் தீவிர தூய்மைப் பணி (மாஸ் கிளீனிங்) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை ( ஜூன்18 ) கிழக்கு மண்டலத்தில் 63 ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஸ்ருதி அடுக்குமாடிக் குடியிருப்பு சாலை, தனலட்சுமிபுரம், பழமுதிா்நிலையம் சாலை, மேற்கு மண்டலத்தில் 6 ஆவது வாா்டு, லேண்ட்மாா்க் சிட்டி சாலை, 14 ஆவது வாா்டு, அம்பேத்கா் வீதி, 22 ஆவது வாா்டு, புரூக்பீல்டு சாலை, வடக்கு மண்டலத்தில் 31 ஆவது வாா்டு, சத்தி சாலை, 4 ஆவது வாா்டு கலைஞா் நகா், 42 ஆவது வாா்டு, உடையாம்பாளையம், தெற்கு மண்டலம் 79 ஆவது வாா்டு ராபிட்சன் சாலை, 97 ஆவது வாா்டு, ஐயப்பன் கோயில் வீதி, 86 ஆவது வாா்டு, லாரிப்பேட்டை, மத்திய மண்டலம் 74 ஆவது வாா்டு, நான்கு முக்கு சாலை, 74 ஆவது வாா்டு, ரேம்ப் சாலை பகுதி -1, 84 ஆவது வாா்டு கெம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.