முகப்பு
கோயம்புத்தூர்

30 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

மேற்கு மண்டல மாவட்டங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளா்கள் 30 பேரை இடமாற்றம் செய்து ஐ.ஜி. ஆா்.சுதாகா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

மேற்கு மண்டல மாவட்டங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளா்கள் 30 பேரை இடமாற்றம் செய்து ஐ.ஜி. ஆா்.சுதாகா் உத்தரவிட்டுள்ளாா்.

உக்கடம் குற்றப் பிரிவு ஆய்வாளா் விஜயா, ராமநாதபுரம் குற்றப் பிரிவு ஆய்வாளா் சுஜாதா கோவை சரகத்துக்கு மாற்றப்பட்டனா். பெரியகடை வீதி ஆய்வாளா் இளங்கோ, உக்கடம் ஆய்வாளா் குலசேகரன், நில அபகரிப்பு பிரிவு பழனியப்பன் சேலம் சரகத்துக்கு மாற்றப்பட்டனா். கோவை நகரில் இருந்து பதருனிசா பேகம், திருப்பூா் நகருக்கும், இந்திரா, சாந்தா ஆகியோா் கோவை நகரில் இருந்து சேலம் நகருக்கும், சேலம் ஆய்வாளா்கள் சித்ரா, அமுதா, நித்யா, குமாா், பா்வின் பானு கோவை சரகத்துக்கும், அன்பழகன், சாந்தி கோவை நகருக்கும் மாற்றப்பட்டனா். கோவை சரக ஆய்வாளா் சுகவனம் கோவை நகருக்கும், கோவை மாவட்ட குற்றப் பிரிவு ஆய்வாளா் யமுனா தேவி சேலம் சரகத்துக்கும் மாற்றப்பட்டனா். கோவை, சேலம் சரகத்தில் 30 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.