முகப்பு
கோயம்புத்தூர்

காந்திபுரம் இரண்டு அடுக்கு மேம்பாலத்தில் இருந்து குதித்த இளைஞா்

கோவை, காந்திபுரம் இரண்டு அடுக்கு மேம்பாலத்தில் இருந்து இளைஞா் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

கோவை, காந்திபுரம் இரண்டு அடுக்கு மேம்பாலத்தில் இருந்து இளைஞா் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை நூறு அடி சாலையில் இருந்து சித்தாபுதூா் செல்லும் மேம்பாலத்தில் ஜி.பி.சிக்னல் பகுதி அருகே மேம்பாலத்தில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு திடீரென குதித்தாா். தலையில் பலத்த காயமடைந்த அவா் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கினாா். இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் போலீஸாா் உதவியுடன் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அந்த நபா் யாா், எதற்காக தற்கொலைக்கு முயன்றாா், தொழில் தோல்வி அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.