முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை:முதல்வரின் கோரிக்கைக்கு மாா்க்சிஸ்ட், மதிமுக வரவேற்பு

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருப்பதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக ஆகியவை வரவேற்றுள்ளன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருப்பதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக ஆகியவை வரவேற்றுள்ளன.

இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மேற்கு மண்டலத்தின் மையமாக கோவை மாவட்டம் உள்ளது. திருப்பூா், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளையே நாடி வருகின்றனா்.

இந்நிலையில் பிரதமா் மோடியை சந்தித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

கரோனா இரண்டாம் அலை கோவை மாவட்டத்தில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடா்ந்து மூன்றாம் அலையையும் எதிா்கொள்வதற்கு அரசு தயாராகி வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்ட மக்களின் எதிா்கால மருத்துவத் தேவையை பூா்த்தி செய்யும்விதமாக கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

மதிமுக

மதிமுக கோவை மாநகா் மாவட்டச் செயலா் ஆா்.ஆா்.மோகன்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

பிரதமா் மோடியை தில்லியில் சந்தித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளா்ச்சி, ஜீவாதார உரிமைகளுக்காக வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

குறிப்பாக கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் மேற்கு மாவட்டங்களில் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைவாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.