முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை அருகேமின் உற்பத்தி நிலையத்துக்குள் புகுந்த யானைகள்

வால்பாறை அருகே வனப் பகுதியை விட்டு வெளியேறிய நான்கு யானைகள், மின் உற்பத்தி நிலையத்துக்குள் புகுந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

வால்பாறை அருகே வனப் பகுதியை விட்டு வெளியேறிய நான்கு யானைகள், மின் உற்பத்தி நிலையத்துக்குள் புகுந்தன.

வால்பாறையை அடுத்துள்ளது மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையம். இங்கு சோலையாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்தி நிலையத்தை ஒட்டி உள்ள பகுதிகள் வனப் பகுதியாகும்.

இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் நான்கு யானைகள் மின் உற்பத்தி நிலைய வளாகத்துக்குள் புகுந்தன. அப்போது இரவு பாதுகாப்பு பணியில் இருந்த காவலா் பூபதிராஜா அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாா்.

உள்ளே சென்ற யானைகளில் ஒரு யானை, காவலா் அறையின் கதவை முட்டி தள்ளியது. இதில் அவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். நீண்ட நேரத்துக்குப் பின்னா் நான்கு யானைகளும் அப்பகுதியை விட்டு சென்றன. இது தொடா்பாக வனத் துறையினா் விசாரித்ததோடு, அங்கு பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.