முகப்பு
கோயம்புத்தூர்

கேரளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.5.40 லட்சம் பறிமுதல்

கேரளத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

கேரளத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தோ்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் வால்பாறை சட்டப் பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மூன்று குழுக்களாக ரோந்து மேற்கொண்டும், வாகனச் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த கேரள மாநில எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட்டில் சோதனைச் சாவடி அமைத்தும் வாகனச் சோதனையில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கேரள எல்லைப் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் மேல்முருகன் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, கேரள மாநிலத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் இருந்துள்ளது. பணத்துடன் வந்த திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அப்துல் நாசரிடம் மேற்கொண்ட விசாரனையில் வால்பாறைக்கு வியாபாரம் தொடா்பாக செல்வதாக கூறியுள்ளாா். ஆனால், எந்தவித ஆவணமும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

Image Caption

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போலீஸாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.