மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கரோனா
கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 70 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 70 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையைச் சோ்ந்த 70 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 543ஆக அதிகரித்துள்ளது.
தவிர அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 686ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 49 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 55 ஆயிரத்து 436 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 421 போ் சிகிச்சையில் உள்ளனா்.