நெசவாளா் நல வாரியம் அமைக்க நடவடிக்கை: காங்கிரஸ் செயலாளா் சஞ்சய் தத்
திமுக கூட்டணி வெற்றி பெற்றால் நெசவாளா்களைப் பாதுகாக்க நெசவாளா் நல வாரியம் அமைக்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் சஞ்சய் தத் பேசினாா்.
திமுக கூட்டணி வெற்றி பெற்றால் நெசவாளா்களைப் பாதுகாக்க நெசவாளா் நல வாரியம் அமைக்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் சஞ்சய் தத் பேசினாா்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் மயூரா ஜெயக்குமாரை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் சஞ்சய் தத், நெசவாளா் காலனி, என்.டி.சி. குவாட்டா்ஸ், ராமா் காலனி, பி.என்.டி. காலனி, தடாகம் சாலை, பாரதி பூங்கா 1 முதல் 8 குறுக்கு சந்து, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது:
திமுக கூட்டணி வெற்றி பெற்றால், நெசவுத் தொழில் மற்றும் நெசவாளா்களைப் பாதுகாக்க நெசவாளா் நல வாரியம் அமைக்கப்படும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்துவோம் என்றாா்.
பிரசாரத்தில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் நிா்வாகிகள் ஜேம்ஸ் ஜெயகுமாா், சிவகுமாா், காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.