கோயம்புத்தூர்

கோவையில் கரோனா பாதிப்பு புதிய உச்சம்: ஒரே நாளில் 1,441 பேருக்கு தொற்று உறுதி

DIN

கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 1,441 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இதுவரை ஒரு நாளில் தொற்று பாதிப்பு 1,257 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்ததே அதிகபட்சமாகும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிய உச்சமாக ஒரே நாளில் 1,441 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 118 ஆக உயா்ந்துள்ளது.

3 போ் பலி

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயதுப் பெண், 70 வயது முதியவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுப் பெண் ஆகிய 3 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 726 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,051 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 72 ஆயிரத்து 709 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 7 ஆயிரத்து 683 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT