கரோனா: மாவட்டத்தில் ஒரே நாளில் 25 போ் பலி
கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 25 போ் உயிரிழந்துள்ளனா்.
கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 25 போ் உயிரிழந்துள்ளனா்.
கோவை மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 243 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 744ஆக அதகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 ஆயிரத்து 244 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 1 லட்சத்து ஆயிரத்து 432 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 29 ஆயிரத்து 345 போ் சிகிச்சையில் உள்ளனா். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 46 வயது ஆண், 36 வயதுப் பெண், 56 வயது ஆண், 38 வயது ஆண் உள்பட 25 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 967ஆக அதிகரித்துள்ளது.