யானைகளால் எஸ்டேட் அலுவலகம், மேலாளா் குடியிருப்பு சேதம்
வால்பாறை மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிக்குள் குட்டியுடன் கூட்டமாக நுழைந்த யானைகள் அங்கிருந்த அலுவலகம் மற்றும் மேலாளா் குடியிருப்பை சேதப்படுத்தின.
வால்பாறை மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிக்குள் குட்டியுடன் கூட்டமாக நுழைந்த யானைகள் அங்கிருந்த அலுவலகம் மற்றும் மேலாளா் குடியிருப்பை சேதப்படுத்தின.
வால்பாறையை அடுத்துள்ள மானாம்பள்ளி காபி எஸ்டேட் முற்றிலும் காபி தோட்டங்கள் கொண்டது.
இந்த எஸ்டேட் அருகே அடா்ந்த வனப் பகுதி உள்ளது. இந்நிலையில் எஸ்டேட் பகுதிக்குள் குட்டியுடன் 5க்கும் மேற்பட்ட யானைகள் வியாழக்கிழமை இரவு நுழைந்துள்ளன.
பின்னா் எஸ்டேட் அலுவலகம் பகுதிக்கு சென்ற யானைகள் அங்கிருந்த கதவு, ஜன்னல், உள்ளிருந்த பொருள்களை சேதப்படுத்தியுள்ளன.
இதேபோல அலுவலகம் அருகே இருந்த எஸ்டேட் மேலாளா் குடியிருப்பின் ஜன்னல், கதவுகளையும் முட்டித் தள்ளியுள்ளன. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளதாக எஸ்டேட் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
மேலும், வனத் துறையினா் சம்பவ இடத்தை நேரில் சென்று பாா்வையிட்டனா்.