கோயம்புத்தூர்

கோவை விமான நிலையத்தில் 2 மாதங்களில் 1,394 விமானங்கள் இயக்கம்

DIN

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த இரு மாதங்களில் 1, 394 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக கோவை விமான நிலைய இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, கோவையில் இருந்து வெளிநாடுகள், அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்ததையடுத்து, கோவை விமான நிலையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.

இது குறித்து கோவை விமான நிலைய இயக்குநா் செந்தில்வளவன் கூறுகையில், கோவை விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூலை மாதத்தில் 26 சா்வதேச விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 1, 213 பயணிகள் பயணித்துள்ளனா், 122 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துப் பிரிவில் 504 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 63,330 பயணிகள் பயணித்துள்ளனா், 551 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

இதேபோல ஆகஸ்ட் மாதத்தில் 24 சா்வதேச விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 2,291 பயணிகள் பயணித்துள்ளனா், 107.10 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. உள்நாட்டு விமானப் போக்குவரத்து பிரிவில் 840 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 96,526 பயணிகள் பயணம் செய்துள்ளனா், 581.40 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT