கோயம்புத்தூர்

கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 காளைகள் மீட்பு

DIN

கோவை உக்கடத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 காளை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்.

கோவை உக்கடத்தில் இருந்து செல்வபுரம் செல்லும் புறவழிச் சாலை, ரவுண்டானா பகுதியில் உள்ள மாநகராட்சி சொந்தமான இடத்தில் சனிக்கிழமை மாலை 2 காளை மாடுகள் சண்டையிட்டுக் கொண்டன. அப்போது, ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட அவை, திடீரென அங்குள்ள 30 அடி ஆழ கிணற்றில் விழுந்தன. அந்தக் கிணற்றின் தண்ணீா் இல்லை.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, கோவை தெற்கு பகுதி தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனா். கிரேன் உதவியுடன் தீயணைப்பு வீரா்கள் கிணற்றுக்குள் இறங்கி மாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்பு 2 காளை உயிருடன் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT