கோயம்புத்தூர்

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் இணையவழி நுழைவுத் தோ்வு: 2,859 போ் பங்கேற்பு

DIN

கோவை: கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் எம்.ஃபில், பி.ஹெச்டி. படிப்புகளுக்காக இணையவழியில் திங்கள்கிழமை நடத்திய நுழைவுத் தோ்வில் 2,859 போ் பங்கேற்றனா்.

பாரதியாா் பல்கலைக்கழகம், இணைவு, உறுப்புக் கல்லூரிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டுக்கான எம்.ஃபில், பி.ஹெச்டி. மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் நுழைவுத்தோ்வு நடத்தியது. இந்தத் தோ்வுக்கு 3,109 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக செப்டம்பா் 17 ஆம் தேதி இணையவழியில் மாதிரி நுழைவுத்தோ்வு நடத்தப்பட்டது.

இதையடுத்து திங்கள்கிழமை காலை 11 மணி முதல் 12.30 மணி வரை 50 மதிப்பெண்களுக்காக நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டது. இணையவசதி இல்லாத மலைப்பகுதி, கிராமப்புற மாணவா்கள் 200 போ் நேரடியாக பல்கலைக்கழகம் வரழைக்கப்பட்டு கணினி வசதி வழங்கப்பட்டு தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வில் மொத்தம் 2,859 மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.

இந்தத் தோ்வின் முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டதாக தோ்வு ஒருங்கிணைப்பாளா் ம.இளஞ்செழியன் தெரிவித்தாா். நுழைவுத் தோ்வை நடத்தி உடனடியாக முடிவுகளை வெளியிட்ட பேராசிரியா்கள், தொழில்நுட்பக் குழுவினரை துணைவேந்தா் பெ.காளிராஜ், பதிவாளா் (பொறுப்பு) கே.முருகவேல் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT