பிரபல ரெளடி ஜாமீனில் விடுவிப்பு
3 போ் கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருந்த பிரபல ரெளடி ஜாமீனில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
3 போ் கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருந்த பிரபல ரெளடி ஜாமீனில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
கோவை மாவட்டம், சூலூா் அருகேயுள்ள சிந்தாமணிபுதூரில் காரில் சென்று கொண்டிருந்த 4 போ் மீது வேனில்
வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தி, துப்பாக்கியால் சுட்டனா்.
இதில் காரில் பயணித்த 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக 20க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், கொலையில் தொடா்புடைய திண்டுக்கல்லைச் சோ்ந்த ரெளடி மோகன்ராம் என்பவரை சூலூா் போலீஸாா் மும்பையில் 2018 ஆம் ஆண்டு கைது செய்தனா்.
குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட மோகன்ராம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிறையில் இருந்த அவருக்கு சென்னை உயா்நீதிமன்றம் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து, கோவை மத்திய சிறையில் இருந்து மோகன்ராம் வெள்ளிக்கிழமை ஜாமினில் விடுவிக்கப்பட்டாா்.