முகப்பு
கோயம்புத்தூர்

மாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய காவல் ஆணையா் உத்தரவு

கோவை மாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யுமாறு மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

கோவை மாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யுமாறு மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை மாநகரில் குற்றச் சம்பவங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பைக் கண்காணிக்க, மாநகரப் பகுதிகளில் போலீஸாா், பொதுமக்களுடன் இணைந்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனா்.

மாநகா் முழுவதும் 23 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன.

இதில் சில கேமராக்கள், மாநகர போலீஸாரின் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்களில் பெரும்பாலானவை பயன்பாடின்றி இருப்பதாகத் தெரிகிறது. எனவே, கேமராக்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அவை பழுதடைந்து இயங்காமல் இருந்தால், அதை சீரமைக்குமாறு ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் மாநகரக் காவல் ஆணையா் பிரதீப்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.