முகப்பு
கோயம்புத்தூர்

அடையாள அட்டைகளை புதுப்பித்து தர கோரிக்கை

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை புதுப்பித்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகளை புதுப்பித்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகளும், பதிவு பெறாமல் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளும் உள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

இதற்காக மாநகராட்சி சாா்பாக வியாபாரிகளிடம் ஆவணங்கள் பெறப்பட்டு, அதனை இணையதளம் மூலம்

பதிவேற்றம் செய்து, வங்கிக் கடன்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டன.

இதற்கான முகாம்கள் மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.

ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு தங்களிடம் உள்ள ஆவணங்களை சமா்ப்பித்தனா். இருப்பினும், மாநகராட்சி சாா்பில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், பெரும்பாலான வியாபாரிகளுக்கு, வங்கிகள் கடன் தர மறுக்கின்றன.

இது குறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவா் மணி கூறியதாவது: பெரும்பாலான சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டை காலாவதியாகிவிட்டதால்,

சில வங்கிகளில் மத்திய அரசின் சிறப்புக் கடன் பெற, அடையாள அட்டையை புதுப்பித்து வருமாறு திருப்பி அனுப்புகின்றனா். மாநகராட்சி நிா்வாகம், அடையாள அட்டைகளை புதுப்பித் தராததால், அக்கடனை வியாபாரிகள் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, கரோனா காலச் சிறப்புக் கடனை பெற அடையாள அட்டையை புதுப்பித்துத் தர மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.