சுகாதார நிலையத்திற்குள் ஒற்றைக்காட்டு யானை நடமாட்டம்: அச்சத்தில் செவிலியர்கள்
சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் ஒற்றைக்காட்டு யானை நடமாட்டம் உள்ளதால், செவிலியர்கள் அச்சமடைந்து உள்ளனர்.
வால்பாறை: சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் ஒற்றைக்காட்டு யானை நடமாட்டம் உள்ளதால், செவிலியர்கள் அச்சமடைந்து உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் ஒற்றைக்காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இதை அங்குள்ள சிசிடிவி கேமரா மூலமாக வைரல் ஆகி வருகிறது.
தற்போது நள்ளிரவில் வரும் ஒற்றைக்காட்டு யானை, அங்குள்ள இரவு பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் பார்த்து அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்
எனவே சுகாதார நிலைய வளாகத்திற்குள் தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தினால் யானை, சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வளாகத்திற்கு உள்ளே நடமாடி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சுகாதார நிலையத்திற்கு வளாக தடுப்பு சுவர் கட்டித் தர வேண்டும் என நோயாளிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஊழியர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.