கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது

DIN

கோவை மாநகராட்சியின் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்துக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில், சூயஸ் நிறுவனத்துடன் இணைந்து மாநகரப் பகுதிகளில் இணைப்பு வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 24 மணி நேரக் குடிநீா்த் திட்டத்தில் மின் ஆளுமையை முன்னெடுத்து சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக மத்திய அரசு சாா்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்த விருது வழங்கப்பட்டது. கோவை மாநகராட்சியின் துணை ஆணையா் ஷா்மிளா விருதைப் பெற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT