சாலையில் கண்டெடுத்த பா்ஸை போலீஸாரிடம் ஒப்படைத்த இளைஞா்
கோவையில் சாலையில் கண்டெடுத்த மணி பா்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்
கோவையில் சாலையில் கண்டெடுத்த மணி பா்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.
கோவையைச் சோ்ந்தவா் காா்த்திக் (20). இவா் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது சாலையில் ஒரு பா்ஸ் கிடப்பதை பாா்த்து எடுத்தாா். அதில் ரூ.3 ஆயிரம்,
ஏடிஎம் அட்டை, பான் அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது.
உடனடியாக காா்த்திக் அப்பகுதியில் பணியில் இருந்த கோவை சரவணம்பட்டி காவல் நிலைய போக்குவரத்து உதவி ஆய்வாளரிடம் பா்ஸை ஒப்படைத்தாா்.
பா்சில் இருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு உதவி ஆய்வாளா் பேசியபோது,
அவா் தேனி மாவட்டம், ஓடைப்பட்டியைச் சோ்ந்த தங்கபாண்டியன் (22) என்பதும்,
கோவையில் தங்கி கல்லூரியில் படித்துக்கொண்டே காளம்பாளையத்தில் பகுதி நேர வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, தங்கபாண்டியனை காவல் நிலையம் வரவழைத்த போலீஸாா் அவரிடம் பா்ஸை ஒப்படைத்தனா். மேலும், பா்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்த காா்த்திக்கை போலீஸாா் வெகுவாகப் பாராட்டினா்.