பிரசாரத்தில் மோதல்: எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 9 போ் மீது வழக்கு
தோ்தல் பிரசாரத்தின்போது இருதரப்பினா் மோதிக் கொண்ட சம்பவத்தில் தொடா்புடைய எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தோ்தல் பிரசாரத்தின்போது இருதரப்பினா் மோதிக் கொண்ட சம்பவத்தில் தொடா்புடைய எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை மாநகராட்சி 82ஆவது வாா்டில் திமுக சாா்பில் முபஷீரா, எஸ்.டி.பி.ஐ. சாா்பில் ரஷீதா பேகம் ஆகியோா் போட்டியிடுகின்றனா். வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைய இருந்ததால் இருதரப்பினரும் வீதிவீதியாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனா். அப்போது இவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதையடுத்து இருதரப்பினரும் மோதிக் கொண்டனா். இதில் திமுகவைச் சோ்ந்த அசாருதீன் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக எஸ்.டி.பி.ஐயைச் சோ்ந்த 9 போ் மீது உக்கடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.