கோயம்புத்தூர்

தோட்ட தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலி: அரசாணை வெளியிட வலியுறுத்தி ஆா்பாட்டம்

DIN

தோட்ட தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தப்டச ஊதிய உயா்வை வழங்க வலியுறுத்தியும், இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சிக்கும் தொழிற்சங்கங்கங்களை கண்டித்தும் தோட்ட தொழிற்சங்கத்தினா் வால்பாறையில் ஆா்பாட்டம் செய்தனா்.

தமிழகத்தில் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.425.50 வழங்குவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை இதற்கான இறுதி அரசாணை வெளியிடப்படாமல் உள்ளது.

இதற்கிடையே அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தொழிறச்ங்கத்தினா் அரசு அறிவித்துள்ள ஊதியத்திற்கு குறைவாக இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்துவதை விரும்பாத தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வால்பாறை காந்தி சிலை முன்பு அரசு உடனடியாக இறுதி அரசாணை வெளியிடவும், இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்த முயலும் தொழிற்சங்கங்களை கண்டித்தும் ஆா்பாட்டம் நடத்தினர்.

பரமசிவம் (சி.ஐ.டி.யு.) தலைமையிலும், கல்யாணி (மதிமுக) முன்னிலையிலும் நடைபெற்ற ஆா்பாட்டத்தில் பிரபாகரன் (ஐ.என்.டி.யு.சி.), செந்தில் முருகன் (புதிய தமிழகம்), அன்பழகன் (கொங்குநாடு), சாமிதாஸ் (பி.எம்.எஸ்.), செபீா் (மனிதநேய தொழிலாளா் சங்கம்) உள்ளிட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT