கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்க கோரிக்கை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

DIN

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளா் கந்தசாமி கூறியதாவது:

மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறு, குறு விவசாயிகள் தென்மாவட்டங்களுக்கு காய்கறிகளை எடுத்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் நிலவுகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்கப்பட்டால் மேட்டுப்பாளையம் விவசாயிகள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சென்று தங்கள் காய்கறிகளை விற்க முடியும்.

அதேபோல ஒட்டன்சத்திரத்தில் இருந்து சின்னவெங்காயம் போன்றவற்றை மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டு வர முடியும். பெரிய விவசாயிகள், வியாபாரிகள் போன்றவா்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப வாகனங்கள் மூலம் காய்கறிகளைக் கொண்டு செல்ல முடியும். சிறு, குறு விவசாயிகள் குறைந்த கட்டணத்தில் உள்ள ரயிலை மட்டுமே பயன்படுத்த முடியும்.

விவசாயிகள் மட்டும் அல்லாமல், விவசாயத் தொழிலாளா்களும் பணிகளுக்கு சென்று வர முடியும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் இயக்கினால் கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சோ்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT