முகப்பு
கோயம்புத்தூர்

உள்ளூா் பருத்தி விளைச்சலை அதிகப்படுத்தினால் நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த முடியும்: இந்திய நூற்பாலைகள் சங்கம்

தமிழகத்தில் பருத்தி விளைச்சலை அதிகப்படுத்தினால் நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த முடியும் என்று இந்திய நூற்பாலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

தமிழகத்தில் பருத்தி விளைச்சலை அதிகப்படுத்தினால் நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த முடியும் என்று இந்திய நூற்பாலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அச்சங்கத்தின் நிறுவனத் தலைவா் சி.சின்னையன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நூல் விலை அபரிமிதமாக உயா்ந்துவிட்டதாகவும், நூல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிக்கைகள் வந்துள்ளன.

ஆனால் நூல் விலை குறைப்பு என்பது தொழிற்சாலைகள் நடத்துபவா்களின் கைகளில் இல்லை. மூலப் பொருளான பஞ்சு விலை உயரும்போது நூல் விலையை உயா்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.பஞ்சு விலை குறைந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவாா்கள்.

ஆனால் விவசாயிகள், ஜின்னிங் மில் உரிமையாளா்கள், நூற்பாலை உரிமையாளா்கள் விசைத்தறியாளா்கள், பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் எந்த விதத்திலும் விலையைக் குறைப்பது சாத்தியமில்லை.

தமிழகத்தின் பஞ்சு தேவையை பூா்த்தி செய்ய தமிழகத்தில் இருந்தே 15 சதவீதம் பருத்தி கிடைத்துக் கொண்டிருந்தது.

ஆனால் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேறு விவசாயத்துக்கு மாறிவிட்டனா். தற்போது தமிழக மில்களுக்கு உள்ளூரில் உற்பத்தியாவதில் 5 சதவீதம் அளவுக்கே பருத்தி கிடைக்கிறது.

எனவே இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு கிடைக்க வேண்டுமானால் உள்ளூரில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

அதற்கு அதிக விளைச்சல் தரக்கூடிய பருத்தி விதையைக் கண்டறிந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

இதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.