அரசியல் கட்சியினருடன் மாவட்டத் தோ்தல் அலுவலா் இன்று ஆலோசனை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்டத் தோ்தல் அலுவலா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்டத் தோ்தல் அலுவலா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.
தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.
இந்நிலையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிமுறைகள், கரோனா தடுப்பு முறைகள் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.