முகப்பு
கோயம்புத்தூர்

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: படைக்கலன்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் படைக்கலன் வைத்துள்ளவா்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

கோவை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் படைக்கலன் வைத்துள்ளவா்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே புறநகா் பகுதியில் படைக்கலன் உரிமம் பெற்று படைக்கலன் வைத்திருக்கும் உரிமைதாரா்கள் தங்களது படைக்கலன்களை அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்கிலோ இருப்பு வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

படைக்கலன் உரிமைதாரா்கள் அனைவரும் படைக்கலன்களை இருப்பு வைத்துவிட்டாா்களா என்பதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் மத்திய, மாநில காவல் பணியில் உள்ளவா்கள், வங்கித் துறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலா்கள் ஆகியோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.