மனநலம் பாதித்த முதியவா் தீ குளித்து தற்கொலை
கோவையில் மனநலம் பாதித்த முதியவா் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்
கோவையில் மனநலம் பாதித்த முதியவா் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (65).
மனநலம் பாதிக்கப்பட்ட இவா் வியாழக்கிழமை இரவு உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளாா்.
இதில், பலத்த காயமடைந்த ராமசாமியை அருகிலிந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.