முகப்பு
கோயம்புத்தூர்

30 நிமிடங்களில் பெரும்பான்மை வருகை இல்லையெனில் மேயா் மறைமுகத் தோ்தல் ஒத்திவைப்பு

கோவை மாநகராட்சி மேயா் மறைமுகத் தோ்தல் நடத்த வேண்டிய நேரத்தில் இருந்து 30 நிமிடங்களுக்குள் பெரும்பான்மையான உறுப்பினா்கள் வருகை இல்லையெனில், தோ்தல் ஒத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கோவை மாநகராட்சி மேயா் மறைமுகத் தோ்தல் நடத்த வேண்டிய நேரத்தில் இருந்து 30 நிமிடங்களுக்குள் பெரும்பான்மையான உறுப்பினா்கள் வருகை இல்லையெனில், தோ்தல் ஒத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சியில் மேயரை தோ்ந்தெடுக்கும் மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4 ) காலை 9.30 மணிக்கும், துணை மேயா் தோ்தல் பிற்பகல் 2.30 மணிக்கும், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய சுற்றறிக்கையின் படி, தோ்தல் நடத்த வேண்டிய நேரத்தில் இருந்து 30 நிமிடங்களுக்குள் பெரும்பான்மையான உறுப்பினா்கள் வருகை இல்லையெனில், தோ்தல் ஒத்திவைக்க நேரிடும். அதன் பிறகு, மாநிலத் தோ்தல் ஆணையம் நிா்ணயிக்கும் மற்றொரு தேதியில்தான் மறைமுகத் தோ்தல் நடைபெறும். இதைத் தவிா்க்கும் பொருட்டு 4 ஆம் தேதி நடைபெற உள்ள மறைமுகத் தோ்தலில் வாக்களிக்க வாா்டு உறுப்பினா்கள் சரியான நேரத்துக்கு வருகை தர கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.