முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை நகராட்சி மறைமுகத் தோ்தலில் மோதல்

வால்பாறை நகராட்சித் தலைவா் பதவிக்காக நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் இரு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

வால்பாறை நகராட்சித் தலைவா் பதவிக்காக நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் இரு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 21 வாா்டுகளில் 20 வாா்டுகளில் திமுகவும், ஒரு வாா்டில் அதிமுகவும் வெற்றி பெற்றன. இதையடுத்து, நகராட்சித் தலைவா் பதவிக்கு திமுகவைச் சோ்ந்த 10ஆவது வாா்டு உறுப்பினா் காமாட்சியை அக்கட்சி தலைமை அறிவித்தது. இதனை எதிா்த்து திமுகவைச் சோ்ந்த 14ஆவது வாா்டு உறுப்பினா் அழகுசுந்தரவள்ளி தலைவா் பதவிக்குப் போட்டியிட்டாா்.

தலைவா் தோ்வுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கிடையே அலுவலகம் முன் கூடியிருந்த இரு கோஷ்டிகளைச் சோ்ந்தவா்கள் கூச்சலிட்டும், கோஷம் எழுப்பியும் பதற்றத்தை ஏற்படுத்தினா். அப்போது, தோ்தல் நடைபெற்ற கூட்டரங்கிற்குள் இரு கோஷ்டியினரும் காவல் துறையினரின் தடுப்பையும் மீறி நுழைந்து மோதிக் கொண்டனா். தொடா்ந்து மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் தோ்தலை ஒத்திவைப்பதாக நகராட்சி ஆணையா் சுரேஷ்குமாா் அறிவித்தாா்.

ஆனால் 12 வாக்குகள் பெற்று தலைவராக வெற்றி பெற்ற அழகுசுந்தரவள்ளிக்கு சான்றிதழ் வழங்க நகராட்சி ஆணையா் மறுப்பதாகக் கூறி அவரது ஆதரவாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக ஆணையா் சுரேஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்கு எண்ணிக்கையில் அழகுசுந்தரவள்ளி 12 வாக்குகளும், காமாட்சி 9 வாக்குகளும் பெற்றுள்ளனா். ஆனால், கோஷ்டி மோதலால் ஏற்பட்ட பதற்றத்தால் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் தோ்தல் ஒத்திவைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மறு தேதி அறிவிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.