முகப்பு
கோயம்புத்தூர்

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் நரம்பியல் அதிநவீன சிகிச்சை மையம் தொடக்கம்

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் தலைசுற்றல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக நரம்பியல் அதிநவீன சிகிச்சை மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் தலைசுற்றல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக நரம்பியல் அதிநவீன சிகிச்சை மையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் நியூரோ ஈக்விலிபிரியம் என்ற நிறுவனத்துடன் இணைந்து தலைசுற்றல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நரம்பியல் அதிநவீன சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நியூரோ ஈக்விலிபிரியம் நிறுவன இயக்குநா் ரஜ்னீஸ் பண்டாரி, மருத்துவ இயக்குநா் அனிதா பண்டாரி, ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை முதல்வா், மருத்துவ இயக்குநா் பி.சுகுமாரன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை நரம்பியல் மருத்துவ நிபுணா் அசோகன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இது தொடா்பாக நியூரோ ஈக்விலிபிரியம் நிறுவன இயக்குநா் ரஜ்னீஸ் பண்டாரி கூறியதாவது:

பல்வேறு காரணங்களால் வயது வரம்பின்றி பலருக்கும் தலைசுற்றல் ஏற்படுகிறது. இது பல்வேறு நோய்களின் அறிகுறியாக உள்ளது. இதனை அலட்சியம் செய்யாமல் முழு பரிசோதனை செய்து அதற்கேற்ற சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாக முடிவதற்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் தலைசுற்றல் பாதிப்பை முழுமையாக ஆய்வு செய்து அதற்கான உரிய சிகிச்சை அளிக்கும் மையமாக இந்த மையம் திகழும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.