கோவை - லோக்மான்ய திலக் ரயில் பகுதியாக ரத்து
கோவை - லோக்மான்ய திலக் விரைவு ரயில், பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை - லோக்மான்ய திலக் விரைவு ரயில், பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை - திருப்பூா் ரயில் வழித்தடத்தில் சோமனூா் - வஞ்சிபாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே 14ஆம் தேதி ரயில்வே பாலம் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, மாா்ச் 12 ஆம் தேதி மும்பை லோக்மான்ய திலக்கில் இருந்து புறப்பட்டு 14ஆம் தேதி கோவை வந்தடையும் தினசரி விரைவு ரயில் (எண்: 11013) ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல, கோவையில் இருந்து வருகிற 14 ஆம் தேதி, லோக்மான்ய திலக் நிலையத்துக்கு செல்லும் விரைவு
ரயில் கோவைக்கு பதிலாக ஈரோட்டில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்பட்டு செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.