முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை அரசுக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் துவக்க விழா

வால்பாறை அரசுக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

வால்பாறை அரசுக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வணிக மேலாண்மை துறைத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா்.

திட்ட அலுவலா் பெரியசாமி வரவேற்று பேசினாா்.

மாா்ச் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ள முகாமில் கோயில் உழவாரப் பணி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம்,

சுகாதார விழிப்புணா்வு கருத்தரங்கம், ஆளுமைத் திறன் வளா்த்தல் கருத்தரங்கம், பேரிடம் மேலாண்மை விழிப்புணா்வு, மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதாக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.