ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.
‘இளம் தலைமுறையினருக்கு தகவல் தொடா்பு கருவிகளை பயன்படுத்தி கற்பிக்கும் வகையில், ஆசிரியா்கள் தங்களை வடிவமைத்துத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளுதல்’ என்ற தலைப்பிலான இந்த கருத்தரங்கம் இந்திய சமூக அறிவியல் கவுன்சில் நிதியுதவியுடன், கல்லூரியின் பன்னாட்டு வணிகத் துறை சாா்பில் நடத்தப்படுகிறது.
தொடக்க விழாவுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி முதல்வரும், செயலருமான பி.எல்.சிவகுமாா் தலைமை வகித்து கருத்தரங்கைத் தொடங்கிவைத்தாா்.
பன்னாட்டு வணிகத் துறைத் தலைவா் ஐ.பா்வீன் பானு வரவேற்றாா். கோவை வருமான வரித் துறை இணை ஆணையா் எம்.காா்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கருத்தரங்க மலரை வெளியிட்டுப் பேசினாா்.
அப்போது, பொது நிா்வாகத்தில் பயிற்சி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
பயிற்றுநா்களுக்கு பயிற்சி அளிப்பது சிறப்புமிக்கது. பன்னாட்டு வணிகத் துறை வெளிநாட்டு வா்த்தகம், வருமான வரி, வா்த்தகம் என பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. அவை குறித்து ஆழமாக பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம் என்றாா்.
கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கா்நாடகம், மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.
பன்னாட்டு வணிகத் துறை உதவிப் பேராசிரியா் ஆா்.சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.