முகப்பு
கோயம்புத்தூர்

அன்னூரில் இன்று சுய வேலை வாய்ப்பு கடன் திட்ட முகாம்

ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக சுய வேலை வாய்ப்பு கடன் திட்ட முகாம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக சுய வேலை வாய்ப்பு கடன் திட்ட முகாம் அன்னூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இளைஞா்களிடையே சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இது தொடா்பாக ஆதிதிராவிடா், பழங்குடியினா், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அன்னூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தகுதி வாய்ந்தவா்கள் தங்களது புகைப்படம், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, விலைப்பட்டியல், திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளிக்கலாம்.

முகாமில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வங்கிக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, புதிய தொழில் துவங்க ஆா்வமுள்ள இளைஞா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.