மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் நடூர் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்புக்கப்பட்டது.
கோயம்புத்தூர்மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் நடூர் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்புக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் நடூர் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்புக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 1வது வார்டுக்குட்பட்ட உக்கான்நகர் கிராமத்தில் 90-க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் இப்பகுதியில் சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக அரசு வழங்கிய இடத்தில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு 8 நாட்களுக்கு ஒருமுறை தான் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் சாலை வசதி, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூடுதலாக உப்பு தண்ணீர் வழங்க வேண்டுமென கிராம மக்கள் கேட்டுள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் நடூர் பகுதியில் காலி குடங்களுடன் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சுரேஷ், காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், ஊராட்சி தலைவர் விமலா, துணைத்தலைவர் வினோத் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு ஏற்படாததால் அன்னூர் சாலையில் தொடர்ந்து 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அன்னூர் வழியாக வந்த வாகனங்கள் தீயணைப்பு நிலையம் வழியாக கோவை சாலைக்கு திருப்பி விடப்பட்டது. இதே போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் நோக்கி வந்த வாகனங்கள் காரமடை வழியாக திருப்பி அனுப்பப்பட்டது.