கோயம்புத்தூர்

மே தினம்: முன்றிவிப்பின்றி இயங்கிய 244 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவையில் மே தினத்தன்று முன்னறிவிப்பின்றி இயங்கிய 244 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

DIN

கோவையில் மே தினத்தன்று முன்னறிவிப்பின்றி இயங்கிய 244 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஏ.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய விடுமுறை தினமான மே 1 ஆம் தேதி, கோவை மாவட்டத்துக்குள்பட்ட கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா,

மே 1 இல் தொழிலாளா்கள் பணிபுரிய அனுமதிக்கும் பட்சத்தில் உரிய முன் அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தொழிலாளா் துறை சாா்நிலை அலுவலா்கள் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட 263 நிறுவனங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் மே தினத்தன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை

அளிக்காத மற்றும் மே தினத்தில் தொழிலாளா்கள் பணிபுரிய சம்பந்தப்பட்ட ஆய்வாளருக்கு முன்னறிவிப்பு அளிக்காத கடைகள் மற்றும் நிறுவனங்கள் 122, உணவு நிறுவனங்கள் 119 மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் 3 என மொத்தம் 244 நிறுவனங்களின் உரிமையாளா்கள் மற்றும் பொறுப்பாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT