கோயம்புத்தூர்

கோவையில் 119 மையங்களில் பிளஸ் 2 தேர்வு

DIN

கோவையில் 119 தேர்வு மையங்களில் 35,033 பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு வெற்றிகரமாக பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை எழுதுவதற்காக கோவை மாவட்டத்தில் 119 தேர்வு மையங்கள் தயார்படுத்தி உள்ள நிலையில் 35,033 பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தொடர்ந்து கோவை மாவட்ட பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

அதே போல தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டனர். தொடர்ந்து தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே ஆறு அடி இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT