கோயம்புத்தூர்

22 கிலோ கஞ்சா கடத்திய நபருக்கு 10 ஆண்டுகள் சிறைகள்கோவை நீதிமன்றம் தீா்ப்பு

DIN

22 கிலோ கஞ்சா கடத்திய நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் இளையராஜா (60). இவா் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கோவை ரயில் நிலையம் அருகே 2020 ஆம் ஆண்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு கோவை மாவட்ட அத்தியாவசியப் பொருள்கள் சட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் இளையராஜா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி லோகேஸ்வரன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT