மிரண்டு ஓடும் யானை. 
கோயம்புத்தூர்

கோவையில் பாகுபலி யானையை விரட்டிய தெரு நாய்! மிரண்டு ஓடிய யானை

மேட்டுப்பாளையத்தில் உலா வரும் பாகுபலி யானையை தெருநாய் ஒன்று குரைத்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

DIN

மேட்டுப்பாளையத்தில் உலா வரும் பாகுபலி யானையை தெருநாய் ஒன்று குரைத்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை காட்டு யானை விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனை அப்பகுதி மக்கள் பாகுபலி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர். 

இந்நிலையில் பாகுபலி யாணையினை ஆபரேஷன் பாகுபலி என்ற திட்டத்தின் மூலம் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி 3 கும்கி யானைகளை வரவழைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து நேற்று அதிகாலை தேக்கம்பட்டி அடுத்துள்ள சமயபுரம் கிராமத்திற்குள் பாகுபலி யானை உலா வந்தது. அப்போது அங்கிருந்த தெருநாய் ஒன்று யானையைக் கண்டு அச்சப்படாமல் குரைத்து விரட்டியது. இதில் பயந்துபோன யானை பிளறியபடி ஓடியது. 

இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? கடைசி வாய்ப்பு!

சென்னை உள்ளிட்ட வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

SCROLL FOR NEXT