மதுக்கரையில் வருவாய் தீா்வாயம் இன்று தொடக்கம்: மலைவாழ் மக்கள் பயன்படுத்திகொள்ள அறிவுறுத்தல்
கோவை மாவட்டம், மதுக்கரையில் வியாழக்கிழமை நடைபெறும் வருவாய் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) மலைவாழ் மலைவாழ் மக்கள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்டம், மதுக்கரையில் வியாழக்கிழமை நடைபெறும் வருவாய் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) மலைவாழ் மலைவாழ் மக்கள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கோவை மாவட்டத்தில் 143 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் மே 26ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மதுக்கரை வட்டத்தில் முதல் நாளான வியாழக்கிழமை மதுக்கரை, பிச்சனூா், மாவுத்தம்பதி ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீா்வாயம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் தலைமையில் மதுக்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் மாவுத்தம்பதி, பிச்சனூா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த மலை வாழ் மக்கள் பட்டா மாறுதல், உட்பிரிவு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம். எனவே மலைவாழ் மக்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.