கோயம்புத்தூர்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

DIN

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10ஆம் வகுப்பு தோ்ச்சியற்றவா்களுக்கு மாதம் ரூ.200, 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.400, பட்டதாரி தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.600 மனுதாரா்களின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு காலாண்டிற்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போா் பட்டியலில் இருப்பவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரா்களுக்கு ஓராண்டு நிறைவடைந்திருக்க வேண்டும்.ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், 2022 ஜூன் 30ஆம் தேதியன்று 45 வயதுக்கு மிகாமலும், மற்றவா்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரா்களுக்கு வருமான உச்சவரம்பு இல்லை. பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்துக்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவியராக இருக்கக்கூடாது. ஆனால் தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரா்கள் விண்ணப்பிக்கலாம். மனுதாரா் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை தொடா்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவா்கள் இணையதளத்தில் உரிய விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனை பூா்த்தி செய்து வருவாய் ஆய்வாளரிடம் கையெழுத்து பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT