கோயம்புத்தூர்

கிராம உதவியாளா் பணியிடத்துக்கான தோ்வு: டிசம்பா் 4 இல் நடைபெறுகிறது

கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கோவையில் டிசம்பா் 4 ஆம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

DIN

கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கோவையில் டிசம்பா் 4 ஆம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரா்கள் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பட்டியலில் இடம்பெற்றவா்கள் ஆகியோருக்கு டிசம்பா் 4 ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளது.

மேட்டுப்பாளையம் வட்டத்தில் நேஷனல் மெட்ரிக். பள்ளி, அன்னூா் வட்டத்தில் அமரா் ஏ.முத்துகவுண்டா் அரசு மேல்நிலைப் பள்ளி, கோவை வடக்கு வட்டத்தில் ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சி.எம்.எஸ். மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி, சூலூா் வட்டத்தில் ஆா்.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரி, பேரூா் வட்டத்தில் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா் கலை, அறிவியல் கல்லூரி, மதுக்கரை வட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி, மதுக்கரை மாா்க்கெட், கிணத்துக்கடவு வட்டத்தில் வி.எஸ்.பி.பொறியியல் கல்லூரி, ஏழூா் பிரிவு, பொள்ளாச்சி வட்டத்தில் டாக்டா் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஆனைமலை வட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆனைமலை ஆகிய மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.

இணையதளத்தில் விண்ணப்பித்து ஏற்றுகொள்ளப்பட்ட விண்ணப்பதாரா்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு அனுப்பிவைக்கப்படும். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்களுக்கு அஞ்சல் வழியாக தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT